• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

Byகாயத்ரி

Jan 17, 2022

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளான இன்று கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விருதுநகர் மேற்கு மாவட்டம் முழுவதிலும் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழாவை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனையின் பேரில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏவுமான எம். எஸ். ஆர். ராஜவர்மன், திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாச பெருமாள், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், கட்சி நிர்வாகிகள் ரஜித்பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், கிருஷ்ணசாமி, செல்வகுமார் ,கார்த்திக், குமார், மாரிக்கனி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போன்று சிவகாசி கிழக்கு ஒன்றியத்தில் விங்கபுரம் காலனியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியம் மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிவகாசி தெற்கு ஒன்றிய ஒன்றியத்தில் சாட்சியாபுரம், ரிசர்வ்லையன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஆணையூர் ஊராட்சி மன்றத் தலைவருமான லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து, கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிவகாசி மேற்கு ஒன்றியத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேஷ் எம்ஜிஆரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.