• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் மாநில அடையாள பொறுப்பில் இருந்து சோனு சூட் விடுவிக்கப்பட்டார்

பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக (State Icon) நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு இருந்தார்இந்த நிலையில் நடிகர் சோனு சூட் நியமனத்தை திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம். ஜனவரி 4-ஆம் தேதி அறிவித்திருக்கிறது இதனைபஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜு தனது அறிக்கையில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.


பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவரான நடிகர் சோனு சூட், தனது நடிப்பால் பிரபலம் அடைந்தார். கொரோனா ஊரடங்கு காலங்களில் எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். அவரது சமூக பணிக்காக பல தரப்பினரும் அவரை கொண்டாடுவது வழக்கம்.


இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அவரது சகோதரி மாளவிகா, அரசியலில் களம் இறங்க உள்ளதாகவும், தனக்கு அரசியலில் களம் இறங்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் சோனு சூட் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.