• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

Byகாயத்ரி

Jan 8, 2022

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் இணை தகுதி பெற்றது.

காலிறுதியில் பெஞ்சமின் போன்ஸி (பிரான்ஸ்) – ஹியூகோ நைஸ் (மொனாகோ) இணையுடன்மோதிய இந்திய இணை அதிரடியாக விளையாடி 6-1, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினர். அரையிறுதியில் போஸ்னியா & ஹெர்சகோவினாவின் டாமிஸ்லாவ் பிரிகிச் – சான்டியாகோ கோன்சாலஸ் (மெக்சிகோ) ஜோடியுடன் போபண்ணா – ராம்குமார் ஜோடி மோதுகிறது.சானியா ஏமாற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் நேற்று களமிறங்கிய சானியா மிர்சா (இந்தியா) – நாடியா கிச்னோக் (உக்ரைன்) இணை 1-6, 6-2, 8-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி – ஸ்டோர்ம் சேண்டர்ஸ் ஜோடியிடம் போராடி தோற்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 5 நிமிடங்களுக்கு நீடித்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து), நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.), மிசாகி டோய் (ஜப்பான்), எலனா ரிபாகினா (கஜகஸ்தான்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.