• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 7, 2022
  1. பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?
    யார்லுங் ட்சாங்போ
  2. ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
    மகாநதி ஆறு.
  3. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
    ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.
  4. தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு எது?
    கோதாவரி ஆறு.
  5. கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?
    கிருஷ்ணா நதியில் பாயும் மிகவும் முக்கியமான கிளைநதி?
    துங்கபத்ரா நதி.
  6. 1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது?
    கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது
  7. லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
    வேலூர் ஸ்ரீபுரம்
  8. உலகின் மிகப்பெரிய தீவு எது?
    கிரீன்லாந்து
  9. 2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
    தசாவதாரம்
  10. எது பாலைவனம் இல்லாத கண்டம்?
    ஐரோப்பா