• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உயர துவங்கிய தங்கம் விலை…

Byகாயத்ரி

Jan 5, 2022

மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் அது தங்கம் என்றே கூறலாம். மக்கள் சிறுக சிறுக பணத்தை சேர்த்து தங்கத்தில் முதலீது செய்கின்றனர்.ஆனால் இன்றைய சூழலில் மக்கள் தாங்கள் சேமித்த பணத்தில் தங்களுக்கு விரும்பிய டிசைனயில், விரும்பிய எடையில் வாங்க முடியுமா என்றால் அது கடினம் என்றே கூறலாம். ஏனென்றால் தங்கத்தின் விலை தினம் தினம் ஏறுமுகத்தில் இருப்பதே இதற்கு காரணம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,280-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து, ரூ.4,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ரூ.66,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.