• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா. வங்கி கடன்கள் சம்பந்தப்பட்ட திரைக்கதையில் தயாராகி வந்த இந்த படத்தை பரசுராம் இயக்க, தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது மகேஷ்பாபுவின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மகேஷ் பாபுவின் உடல்நலம் நன்றாக தேறி விட்டதால் ஜனவரி இறுதியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.