• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – போலீசார் விசாரணை!

பொள்ளாச்சி, ஆனைமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ் ரகுநாத்! ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்! இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்து உள்ளார்! கடந்த சில தினங்களுக்கு முன்பு, உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது!

இந்நிலையில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வனநகரததினம் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து, 1098 சைல்டு லைன் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார்!இதனைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சைல்டு லைன் எண்ணை தொடர்புகொண்டு, பின் ஆனமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், கணேஷ் ரகுநாத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்!