மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா முன்பாக திண்டுக்கல் மதுரைதேசிய நான்கு வழி சாலையில்நேற்று நள்ளிரரவு வாகன மோதியவிபத்தில் ஒருவர் சம்பவ இடத்தின் உயிரிழந்தார்.

அதன் பின் அடுத்தடுத்து தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் இறந்தவர் உடல் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்து போனது. இதில் கை மட்டும் சிதையாமல் உள்ளது. அவர் அணிந்திருந்த ஆடை உள்ளிட்ட அனைத்தும் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.அவர் யார் எந்த ஊர் என்று வரும் எதுவும் தெரியவில்லை. இது குறித்து தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.



