• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங்கில் ஐயப்ப பக்தர்கள் செல்போன்கள் திருட்டு..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

கர்நாடக மாநிலத்திலிருந்து வருகை தந்த ஐயப்ப பக்தர்கள், நேற்று இரவு சாமி தரிசனம் முடித்துவிட்டு, இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மதுரை எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் குளித்துவிட்டு, சுமார் நான்கு மணி அளவில் பேருந்துகளில் செல்போன்களை வைத்துவிட்டு கோவிலுக்குச் சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது, நான்கு செல்போன்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
​இது குறித்து எஸ்.எஸ். காலனி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டணம் வசூலிக்கப்படும் கார் பார்க்கிங்கில் இத்தகைய திருட்டு சம்பவம் நடைபெற்றது அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. கோயில் சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மேலும் பல திருட்டுகள் நடைபெறாமல் தடுக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.