மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 16-வது வார்டு மேலபச்சேரி பகுதியில் பல மாதங்களாக மின்சாரம் இல்லாத நிலையில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல மாதங்களாக தெருவிளக்கு எரியாத நிலையில் மின்சாரம் இல்லாமல் வீடுகளை காலி செய்து வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் குடியேறி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திலும் மின்சார துறையிடமும் தொடர்ந்து புகார் அளித்தும் மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மின்சாரம் இல்லாத நிலையில் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதில் பெண்கள் சிரமப்படுவதாகவும் மாலை நேரங்களில் தெருவிளக்கு எரியாத நிலையில் வீடுகளுக்குள் பாம்பு தேள் போன்ற விஷப் பூச்சிகள் சர்வ சாதனமாக வந்து செல்வதாகவும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி இருட்டான பகுதியாக இருப்பதால் வீடுகளுக்கு செல்ல சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது உச்சகட்டமாக இந்த பகுதியில் பொதுமக்கள் பத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர்
தங்கள் வீடுகளை காலி செய்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய நிலையில் சோழவந்தானை விட்டு வேறு பகுதிக்கு செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
பேரூராட்சியின் இந்தப் பகுதி கவுன்சிலர் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக கவுன்சிலராக உள்ள இவர் தங்கள் வார்டுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத நிலையில் தெரு விளக்கும் எரியாத நிலையில் கடும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். தற்போதுள்ள அரசாவது தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் மற்றும் உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வேதனையுடன் கூறியுள்ளனர்.



