சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து அவர் பேசியதாவது:
இடைக்கால உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனு தமிழக அரசு சாக்கல் செய்திருப்பது குறித்த கேள்விக்கு:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு நல்ல முடிவு. முதல்வர் விஜய் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னாடி தமிழ்நாடு காங்கிரஸ் நிலையை பற்றி கூறியிருந்தோம் தமிழக அரசு சரியான முடிவு எடுத்துள்ளது.
மாணிக்கம் தாகூர் காங்கிரஸிலிருந்து விலகி தவெகவில் இணைந்து விடலாம் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு:
பாஜக இந்து முன்னணி அண்ணாமலை அனைவரும் ஒரே பாணியில் பேசி வருகிறார். அண்ணாமலை ஆர்எஸ்எஸ் இன் சங்கீதான். அண்ணாமலை திருப்பரங்குன்ற விவகாரத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார். திருப்பரங்குன்றத்தில் 300 வருடமாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அண்ணாமலை முகமூடி கீழே விழுந்து விட்டது நான் காங்கிரஸ் கொள்கையினால் சாகும் வரை காங்கிரஸ்காக தான் அண்ணாமலையை போல் பிழப்பில்லாமல் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சீன போட்டுக் கொண்டு திமுகவுடன் சைடு டீலிங் பேசிவிட்டு இந்த பொழப்பு நான் பிழைக்கவில்லை நான் மானத்துடன் வாழ்கிறேன். தமிழ்நாடு அரசு எடுக்க முடிவுக்கு ஆதரவு கொடுப்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக என்னுடைய வேலை
முதல்வர் ஏதேனும் ஒரு பக்கம் நிற்க வேண்டுமென அண்ணாமலை கூறி இது குறித்த கேள்விக்கு: முதல்வர் நின்று விட்டார்.அண்ணாமலை சொல்லும் நிலையில் நிற்க முடியாது. அண்ணாமலை ஒரு வேஸ்ட் பீஸ். கட்சியில் இருந்து தூக்கி விட்டாங்க அதுக்கு முந்தைய பேசினா பேச்சின் வீடியோவை பாருங்கள் என தனது செல்போனில் அண்ணாமலையின் வீடியோவை காண்பித்தார்.என்னை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. நான் பல கட்சி பரந்தாமன் கிடையாது.
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வந்த தகவலில் இதுவரை நடவடிக்கை இல்லை நீங்கள் ஒரு கருத்து முன்னாள் மாநில தலைவர் என மாறுபட்ட கருத்து தெரிவிக்கிறார்கள் என்ற அண்ணாமலை கேள்விக்கு:
தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித புகாரும் வரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். பழைய பாஜகவில் இருந்தவர்கள் இப்போது தீர்ப்பு சொல்லி விட்டார்கள். இந்த புகாரமில்லாமல் நீங்களே ஒரு இதை கிளப்புகிறீர்கள் இதனால் இப்போது எல்லா இடத்திலும் விதியை பேசுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் ஊரின் முறைப்படி ஊரில் இருக்கும் மக்கள் உச்சி பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றுகிறார்கள் 300 ஆண்டுகளாக அப்படித்தான் நடைபெறுகிறது. தனித்தனியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லை காட்டி ஏற்ற சொல்லி விட்டால் விமான நிலையம் முன்பு ஒரு கல்லை காட்டி ஏத்த சொல்வார்கள் போல முருகனைப் பொறுத்த அளவில் பாஜகவும் இந்து முன்னணியும் ராமரை வைத்து வட இந்தியாவில் அரசியல் செய்வதுபோல பிழைப்பு இல்லாமல் இங்கு முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். முருகன் இந்த அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எல்லா மதம் ஜாதிக்கும் சார்ந்தவர்கள் அவர் மீது நம்பிக்கையுடன் உள்ளனர்.
பினராய் விஜயனுக்கு வயசு ஆகிவிட்டது. ரிட்டையர் ஆகும் வயசு ஆகிவிட்டது. அவருக்கும் பாஜகவுக்கும் ராகுல் காந்தி தான் எதிரி, ராகுல் காந்தி தெளிவாக இருக்கிறார் பாலஸ்தீனத்தில் நடந்தது மிகப்பெரிய கொடுமை அந்த கொடுமை மீண்டும் நடக்கக்கூடாது என்று தெளிவாக இருக்கிறார்.
செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை குறித்த கேள்விக்கு: காவலர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் காவாளர்கள் தங்கள் கடமையை செய்யட்டும்.
முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரைடு குறித்த கேள்விக்கு:
அரசாங்கத்தை பொறுத்த அளவில் புகார் வந்திருக்கலாம். திமுகவைப் பொறுத்தளவில் அவர்களுக்கு வீர வசனம் பேசுவது கைவந்த கலை அவர்களுக்கு இடமிருந்து நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தீபம் ஏற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என நீதிமன்றத்தில் அரசு வாதாடுகிறது ஏற்ற வில்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதா என்ற கேள்விக்கு: நல்லபடியாக தீபம் ஏற்றனுமா சாமியை கும்பிட்டோமா என்று தான் இருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு இங்கு வேலை இல்லை. தேவையில்லாத புரளியை கிளப்பி முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் பிரச்சனை ஒன்றும் இல்லாத பிரச்சனை அவர்களுடைய கொள்கையை திணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த அரசியல் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள். பாஜக ஆர்எஸ்எஸ் அவர்களின் கொள்கையை இந்த விஷயத்தில் திணிக்கிறார்கள். தேவையில்லாத பிரச்சனையை பிரச்சினையாக்கி பாஜக கையில் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாஜக மக்களின் அடிப்படை பிரச்சனை குறித்து பேசாது.

காவேரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டவில்லை சட்டப் போராட்டம் நடத்தவில்லை என எடப்பாடி கூறியது கேள்விக்கு: எவ்வளவு அநியாயமாக பேசுகிறார் அண்ணன் டி கே சிவக்குமார் பேசியவுடன் தமிழகத்திலிருந்து முதலில் பேசியது நான் தான். அவரை நான் தான் கண்டித்தேன் அதற்கு சிவகுமார் பதில் சொல்லியிருந்தார். டெல்லியில் பார்க்கும்போது சொன்னார் கர்நாடகா நான் பேசும் போது நீ எப்படி பேசலாம் என்று. காவிரி தமிழகத்தின் உயர்நாடி அதை விட்டுக் கொடுக்க முடியாது அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும் இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தெளிவாக உள்ளது. இதில் பிரதமர் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது. அவர் உதவி செய்கிறாரோ என எங்களுக்கு சந்தேகம் உள்ளது. டி கே சிவக்குமாருக்கு இவ்வளவு தைரியம் வந்ததற்கு காரணம் கர்நாடகாவில் 18 பாஜக எம்பிக்கள் இருப்பதால் மோடி அங்கு சப்போர்ட் செய்கிறார். உச்சநீதிமன்ற நடுவர் ஆணையம்படி தண்ணீரை கொடுக்க வேண்டும். அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் நல்ல உத்தரவை பெற்றார் அதை நாம் வரலாற்றில் மறுக்க முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியை பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முதல்வரின் 6 மாத கால ஆட்சிக்கு 100 க்கு உங்களுடைய மதிப்பெண்?
முதல்வரின் 6 மாத ஆட்சிக்கு 90மார்க் கொடுப்பேன்.
பாஜக இந்த பிரச்சனையை கிளப்புகிறது என்றால் நவாஸ் கனி ஆய்வுக்கு வந்த போது அவருடன் வந்த இருவர் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டது போல் வீடியோ பரவியது பிரச்சனை அங்கிருந்துதான் தொடங்கியதாக சொல்லப்படும் கேள்விக்கு: நவாஸ் கனி பாவம் அதைப்பற்றி பலமுறை பதில் சொல்லிவிட்டார். பாஜக தான் இந்த பொய் புரட்டை பரப்பியது யாரு பொய்யை வேகமாக பரப்புவது என்ற போட்டியில் திமுக வா பாஜகவா என்று நிலை உள்ளது. திமுகவை என்னமோ சொல்வார்களே
கொத்துசா(திமுக), சங்கிசா என போட்டி நடைபெறுகிறது என்றார்.


