சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வெள்ளாளர் உறவின் முறை முன்னேற்ற சங்கம் சார்பில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அங்குள்ள வ உ சி மஹாலில் ரத்ததான முகாம் நடைபெற்றது

முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ உ சிதம்பரம் பிள்ளையின் திருவுருவப்படத்திற்கு முள்ளிபள்ளம் வெள்ளாளர் உறவின்முறை முன்னேற்ற சங்கம் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் கே ஜெயராமன் சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானசேகரன் சப்பானி முன்னாள் தலைவர் மதுரை வீரன் சுந்தர் சேது அருணாச்சலம் சமூக ஆர்வலர் முல்லை சக்தி வெள்ளாளர் உறவின்முறை முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செயலாளர் சுந்தர் பொருளாளர் மாணிக்கவேலு முன்னாள் தலைவர் மதுரை வீரன் முத்துராமலிங்கம் உதவி தலைவர் பரமசிவம் உதவி செயலாளர் விஜி
மணிகண்டன் ராஜபாண்டி விஜயகுமார் ரஜினிகாந்த் தங்க ராஜா சங்கர் முத்து கண்ணன் பாலசுப்பிரமணியன் அருண் வெள்ளிமலை முத்து முனியாண்டி கர்ணன் சோழவந்தான் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் காடுபட்டி சார்பு ஆய்வாளர் சின்னசாமி மற்றும் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வெள்ளாளர் உறவின்முறை தலைவர் ஞானசேகரன் சமூக ஆர்வலர் முல்லை சக்திஉள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.
