மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத திருமூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாலை 5 மணி அளவில் கோவில் முன்பாக மணமேடை அமைக்கப்பட்டு பெண்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். தொடர்ந்து திருக்கல்யாண மகாயாகம் நடைபெற்றது. சிவாச்சாரியார் கண்ணன்என்ற பரசுராமன் முருகப்பெருமானாக மாப்பிள்ளை வீட்டாராகவும் கணேசன் பட்டர் தேவசேனாவாக
விக்னேஷ் வள்ளியாக பெண் வீட்டார் ஆகவும் இருந்தனர். வேதபாராயணம் பிரசாந்த் சர்மா பூஜைகள் செய்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

அர்ச்சகர் செந்தில் உள்ளிட்டோர் பூஜைகள் செய்தனர் பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தில் தென்கரை சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் பெற்று சென்றனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் கந்தசஷ்டி விழா குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர். காடுபட்டி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தென்கரை ஊராட்சி சார்பில் குடிநீர் உள்ளிட்ட சுகாதார ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
