• Mon. Nov 16th, 2026

நகைத் திருட்டு வழக்கில் த.வெ.க. நிர்வாகியைத் தொடர்புபடுத்தி அவதூறு..,

ByKalamegam Viswanathan

Nov 16, 2026

மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கழக இணைப் பொதுச்செயலாளர் அண்ணன் CTR நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மதுரை காலவாசல் பைபாஸ் பகுதியில் நடைபெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி எனத் தவறாகச் சித்தரித்து, AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று (15.11.2026) மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் மனுவை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளரும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான SR.தங்கப்பாண்டி MLA அவர்கள் நேரில் அளித்தார்.

அப்போது, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியான புகைப்படங்கள் மற்றும் பொய்யான செய்திகளைச் சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.