திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற சக்திவேல் கொண்டு ஆவணம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்கமுருகப்பெருமானை வழிபட்டனர்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் (14-ந் தேதி) முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட “சக்திவேல் ” பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று (15 -ந் தேதி) சூரசம்ஹார லீலை நடைபெற்றது.

இதனையொட்டி தங்கமயில்வாகனத்தில் முருகப் பெருமான்அமர்ந்து தனது திருக்கரத்தில்தன் தாயார் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் இருந்து பெற்ற சக்திவேலை ஏந்தியபடி கோப கனலோடு மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி சன்னதி தெருவில் உலாவ வந்தார்
இதே வேளையில்முருகப்பெருமானின் போர்படை தளபதியான வீரபாகு ,
மரத்திலான வெள்ளை குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி சன்னதி தெருவுக்கு வந்தார்.
இந்த நிலையில் இருமாப்புடன்ஆணவம் கொண்ட சூரபத்மன் வீதிக்கு வந்தார்.

இந்த நிலையில் சன்னதி தெரு, கீழரதவீதி, பெரியரதவீதி, மற்றும்மேல ரதவீதிகளில் முருகப் பெருமான் வலம் வந்து சூரபத்மனிடம் போரிட்டார். இதில் ஆணவம் கொண்ட சூரபத்மன் தன்னை சிங்கமுகமாகவும், ஆட்டு தலையாகவும், மனிததலையாகவும் மாறி மாறி பல உருவங்கள் எடுத்து கொக்கரித்தான். ஆனால் தேவதாது ,தேவர்களை இம்சைப்படுத்திய சூரபத்மனை, முருகப்பெருமான் நான்கு திசையிலும் எட்டு திக்குமாக ஓட, , ஓட தூரத்தினார். இந்த நிலையில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ , ,முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற சக்திவேல் கொண்டு ஆணவம் கொண்டசூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.

உடனே அங்கு திரளாக கூடி இருந்த பக்தர்கள் “வெற்றிவேல்,, “வீரவேல் , என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். புராண கதை இந்த நிலையில் முருகப் பெருமானின் பிரதிநிதியான கோவில் முதல் ஸ்தானிகர் அசோக்
பட்டர் தன் கையில் வீரவாள் ஏந்தி சூரசம்ஹாரத்தின் புராண கதையை கூறினார். மேலும் கதையை கேட்போரும் சம்ஹாரத்தை காண்போருக்கும் சகல ஐஸ்வரமும் வாழ்வில் வெற்றி கிட்டும் என்றார் இதனையடுத்து முருகப் பெருமானுக்கு தீபாராதனை நடந்தது.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதிக்கு முருகப்பெருமான்சென்றார் அங்கு முருகப்பெருமான் தெய்வானைக்கு பூ மாலை மாற்றி சம்பிரதாய திருக்கல்யாணம் நடந்தது. மேலும் சுவாமிக்கும் அம்மனுக்குமாக
மகாதீப , தூப ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து தெய்வானையுடன் முருகப் பெருமான் பூச்சப்பரத்தில்எழுந்தருளியபடி நகர் உலாவ வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்றுசட்டத்தேர் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று (16ந்தேதி) காலையில் மலையை சுற்றி சட்டத் தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனம் மற்றும் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் சாத்தப் படியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்குழுதலைவர் வ.சண்முகசுந்தரம்,கோவில் துணை கமிஷனர் செல்விமற்றும் அறங்காவலர்கள்,
கோவில் சிவாச்சாரியார்கள்,கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்
பாக்ஸ் செய்தி – 1
“எல்லாம் சிவப்பு மயம் “
சம்ஹாரத்தின் அடையாளமாக “சிவப்பு நிறம்” கருதப்பட்டது. ஆகவே
முருகப் பெருமானுக்கு வஸ்திரம் (ஆடை) மற்றும் பூமாலை ஆகியவை சிவப்பு நிறத்திலே அலங்கரிக்கப்பட்டு இருந்தது
*பாக்ஸ் செய்தி – 2
*ஒரு ஆண்டுக்கு 3 முறை
சூரசம்ஹாரம்*
சூரசம்ஹாரம் என்றால்முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் போற்றப்படும்.அதே சமயம் முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி திருவிழாவில சூரசம்ஹாரம் நடைபெறும்..
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரைஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறக்கூடிய பங்குனி பெருவிழாவிலும் , தை மாதத்தில் நடைபெற கூடிய தெப்பத்திருவிழாவிலும் சூரசம்கார லீலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால்கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹாரலீலை வெகு விமாச்சியாக
நடைபெற்று வருகிறது இவ்வாறு ஒருஆண்டிற்கு 3 முறை சூரசம்கார லீலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் செய்தி – 3
*இன்றுஒரே நாளில் 2திருவிழா”
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 10 – ந்தேதி காப்பு கட்டுதலுடன்கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று (16-ந் தேதி) காலையில் கிரிவலத்தில்சட்டத்தேர் பவனி, மாலை 4 மணியளவில் பாவாடை தரிசனம் மற்றும் தங்க கவசம் சாத்துப்படி நடக்கிறது. இந்த நிலையில் இன்று (16-ந் தேதி) காலை 7 மணியளவில்திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. அதாவதுஇன்று (16-ந் தேதி கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியும்,திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்கமுமாக வெவ்வேறு பிராதன 2திருவிழாக்களில ஒரே நாளில் நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.