• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இளமை மாறா அண்ணனுக்கு வாழ்த்து! – கமல்

பிரபல நடிகரும், மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இன்று இளையராஜா அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், “இளமை இதோ இதோ!” என்ற பாடலைப் பாடி, தமிழக மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்திருந்தார்! அது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது! இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year.’ என பதிவிட்டுள்ளார்.