• Sun. Nov 8th, 2026

மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்

ByKalamegam Viswanathan

Nov 8, 2026

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகள் துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவையும் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது.

மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் பயணிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.