கோவை மருதமலை சாலை கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சமத்துவ தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி என்பது இருள் நீங்கி ஒளி பிறப்பதைக் குறிக்கும் தீப ஒளித் திருநாள் ஆகும். இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மருதமலை சாலை கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள அமித்ரா ஆஸ்ட்ரியா எனுல், குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக சமத்துவ தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அண்டை வீட்டார் மற்றும் சக குடும்பத்தினர் என 35 குடும்பத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சேலத்தில் ஒற்றுமையுடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.


இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களாக அதிகாலையில் எண்ணெய்க் குளியல் செய்யும் வகையில், தீபாவளித் திருநாளின் அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்து, அனைவரும் புத்தாடை அணிந்து, கடவுளை வழிபட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, அதிரசம், மைசூர் பாக், முறுக்கு, லட்டு போன்ற பாரம்பரிய பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கும், அக்கம், பக்கத்தினருக்கும் பகிர்ந்து கொன்டனர். வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி இருளைப் போக்கி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.


குறிப்பாக புதிதாகத் திருமணமாகிய தம்பதியினர் பெண்ணின் வீட்டில் முதல்முறையாகக் கொண்டாடும் தீபாவளி ‘தலை தீபாவளி’ என்று சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தென் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில், பகவான் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் சேர்ந்து நரகாசுரனை வதம் செய்த நாளைக் தீபாவளியாக கொண்டாடுகின்றது.
வட இந்தியாயில் பகவான் ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடியதாகவும், சமணம் மற்றும் சீக்கியங்களில் மகாவீரர் வீடுபேறு அடைந்ததும், அமிர்தசரஸ் பொற்கோயில் கட்டுமானத் தொடக்க நாளாகவும் சீக்கியர்களால் கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க இந்த நாளில் இந்த பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி வருவது மகிழ்ச்சி மற்றும் அன்பு சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையில் பண்டிகை அமைந்துள்ளது.

