• Wed. Nov 4th, 2026

அகில இந்திய காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி..,

ByKalamegam Viswanathan

Nov 4, 2026

காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சி மிக சிறப்பாகத்தான் போயிட்டு இருக்கு. எல்லோருக்கும் தெரியும், தமிழ்நாட்டிலும் ஒரு ஊழலற்ற ஊழல் இல்லா ஆட்சி, ஒரு ஊழல் இல்லா சமுதாயம் சாத்தியம், அப்படின்னு எல்லோரையும் நம்ப வச்சிட்டாரு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்.

கூட்டணி கட்சிகளுக்கும் தகுந்த மரியாதை, மதிப்பு, பங்கு எல்லாரும் எல்லாமே. சோ, தமிழ்நாட்டுல இதுதான் வரலாற்றில முதல் முறை கூட்டணி ஆட்சி. அட்லீஸ்ட் அந்த கடந்த 60, 70 ஆண்டு காலத்துல. இதுக்கு முன்னாடி சிலர், “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” அப்படின்னு ஒரு கருத்து போயிட்டு இருந்தது.

இடைத்தேர்தல் தான் முதல் டெஸ்ட் அதுக்கு. கூட்டணி ஆட்சி வந்ததுக்கு அப்புறம், முதல் மக்கள் மடியில (அதாவது அந்த ரெண்டு தொகுதியிலாவது) மக்கள் மடியில ஒரு டெஸ்ட், ஒரு கேள்வி: “கூட்டணி ஆட்சியை முழுமையாக ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம்,” அப்படின்னு ஒரு தெளிவாக ஒரு மெசேஜ் ஒன்னு கொடுத்திருக்காங்க. ரொம்ப நல்லாதான் போயிட்டு இருக்கு, சிறப்பாகத்தான் போயிட்டு இருக்கு.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வந்து விமர்சனம் செய்றாங்க, வந்து அந்த பாலியல் வன்கொடுமை, சிறைக்கைதிகள் தப்பிக்கிறாங்க, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குற்றசாட்டு எந்த மாதிரி இதை நீங்க பார்க்கிறீங்க

இதை பாருங்க, என்ன ஒரு பாலியல் சம்பவம் நடந்தாலும், அது தவறுதான். ஆனால், தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் இதுதான் நடக்கிறது, அப்படின்னு சொல்லுவதும் தவறு.

சோ, நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் இந்த, இந்த ஆட்சியும் பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கிரைம் நடந்தாலும், அதை ரொம்ப சீரியஸாக எடுத்து, அதுக்கு மேல நடவடிக்கை எடுக்கிறாங்க. அது நம்ம எல்லாருக்குமே தெரியுது. முழுமையாக எல்லாம் நின்றுவிட்டதா என்றால் இல்லை.

ஆனால், அதற்கு வேண்டிய என்னலாம் நடவடிக்கை எடுக்கணுமோ, அதெல்லாம் நிச்சயமாக எடுத்துக்கொண்டும்.

தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் பதவி நீக்கம் குறித்த போராட்டம்

*SIR இந்தியா பிளாக் வந்து டூ பிக்கஸ்ட் ராலி இன் ராம்லீலா மைதானம் சார், அது வாட் மீன்ஸ் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கு? ஞானேஷ் குமாரோட பதவிவிலகல் குறித்து தொடர் போராடம் நடைபெறுகிறது

அதாவது முதல அவங்க டெல்லில ஃபர்ஸ்ட் முதல்ல என்ன நடந்துச்சு? பாராளுமன்றத்துக்குள்ள இதை பத்தி பேசுறதுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதுன்றதுனால, கிட்டத்தட்ட 250 பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையிலும், மாநிலங்கள் அவை உறுப்பினர்களும் எங்க கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் வீட்டில் ஒரு பாராளுமன்றம் மாதிரி ஒரு செட்டிங்ல வச்சு, எல்லோரும் ரொம்ப சீரியஸாக பாராளுமன்றத்தில் நாங்கள் எப்படி நடந்து கொள்வோமோ, அதே மாதிரி நடைபெற்றது. இதில் நான் இருந்தேன்.

அதனாலதான் நான் சொல்றேன் இதெல்லாம். ஞானேஷ் குமார் என்பது அவர் ஒரு கருவி.
உண்மையான இங்க பிரதமர் மோதி, மந்திரி அமித்ஷா. அவங்க என்ன செய்றாங்க? வாக்குரிமை மேல கை வைக்கிறாங்க. ஒரு மக்கள விட நீங்க, ஒன்னும் இல்ல நீங்க இப்ப மதுரைக்கு போய் யாருக்கிட்டயாவது ஒரு சாதாரண ஒரு மனிதர் கிட்ட போய், “உங்க ஓட்டர் கார்டு இருக்கா உங்ககிட்ட? அந்த ஓட்டர் கார்டை என்கிட்ட கொடுத்துருங்களேன்,” அப்படின்னு கேட்டீங்கன்னா, அவங்க மூஞ்சில அந்த ஒரு எவ்வளவு பயம் ஒன்னு வரும். அந்த மூஞ்சியிலேயே தெரியும். அவ்வளவு முக்கியத்துவம் அந்த ஓட்டர் கார்டுக்கு. அது மேல இவங்க கை வைக்கிறாங்க. ஏன்னா, அந்த கார்டு வந்து செல்லுமா, செல்லாதா தெரியாது.

ஓட்டர் லிஸ்ட்ல இருக்கீங்களா, இல்லையான்னு தெரியாது. எப்ப வேணா இருக்கலாம், எப்ப வேணா இல்லாம போகலாம்.
யாரு இவங்க இதெல்லாம் முடிவு பண்றதுக்கு? இவங்க யார்? இவங்களை யார் சொல்லி இதெல்லாம் முடிவு பண்றது? சோ, ஞானேஷ் குமார் ஒரு கருவி. கரெக்ட். முதல்ல அந்த கருவியை எடுக்கணும். அதனால அவர் வந்து பதவி ராஜினாமா செய்யணும்னு நாங்க கோரிக்கை வச்சிருக்கோம்.

ஆனா, இதுக்கு வந்து இது ஒரு வாக்குரிமை என்றது ஒரு பெரிய இது வந்து மக்கள் மத்தியில, நீங்க அதான் இதுதான் ஒரு சிம்பிள் டெஸ்ட். நீங்க போய் ஒரு வாக்கு, நீங்க உங்க ஓட்டர் கார்டு கொடுத்துருங்க அப்படின்னு சொன்னீங்கன்னா, அவங்களுக்கு எவ்வளவு பயம் வரும்? அது அதுதான் அவங்களுடைய இது ஐடென்டிட்டியை.
சோ, அதை பறிக்கப்படுறது அதுக்கு எதிராக. சோ, ராம்லீலா மைதானத்தில் ஒரு மிகப்பெரிய, டெல்லியில இதுவரைக்கும் நான் எனக்கு தெரிஞ்சு கடந்த 20, 25 ஆண்டு காலத்துல இந்த மாதிரி ஒரு இவ்வளவு கூட்டம் ஒரு பப்ளிக் மீட்டிங் நடப்பத நான் பார்த்தது கிடையாது.

அதிலிருந்தே உங்களுக்கு ரொம்ப தெளிவாக தெரியுது. முன்னே எல்லா எதிர்க்கட்சியும் ஒன்னா சேர்ந்து, ஒரே ஒரு கோரிக்கை: வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும், அவ்வளவுதான்.
அதற்காக லட்சக்கணக்குல மக்கள் அங்கு வந்து கலந்து கொண்டார்கள். இது ஒரு மிக மகத்தான இதுதான். பேரணி.

இப்போ டி.எம்.கே. பங்கேற்கலையே சார்? இன்வைட் கொடுக்கலையா

நாங்க, டி.எம்.கே.க்கு மட்டும் இல்லமா, யாருக்கெல்லாம் நம்ம இந்தியா ஒரு ஜனநாயகமாக செயல்பட வேண்டும், அப்படின்ற ஒரு எண்ணம் இருக்கோ, அவங்க எல்லாரும் வந்து கலந்துக்கணும், அப்படின்னு தான் நாங்க சொன்னோம்.

சிலர், டெல்லியில பாராளுமன்ற, இது உறுப்பினர்கள் இருக்கும், திமுக-வுக்கு இருக்கு. அவங்க வந்து கலந்து கொண்டு கொண்டு இருந்திருக்கலாம். ஆனால், கலந்துக்கவில்லை. அதை நீங்க அவங்களைத்தான் கேட்கணும்.

எஸ்.ஐ ஆர். வந்ததுனாலதான் தமிழகத்துல வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்குன்ற பொதுவான ஒரு கருத்து இருக்கு. அதே மாதிரி பாம் சிக்ஸ் வந்து கொடுக்கிறதுல வந்து, முதல்ல வந்து கொடுக்கறாங்க. அதுல எஸ்.ஆர்.-ஓட கேள்விகள் வந்து, “இன்னால திருத்த வேண்டியதை முன்னாலே வந்து கொடுக்கிறோம்”னு சொல்றாங்க.

நான் ஒன்னு சொல்றேங்க. 100 பேர் இல்ல போய் கேளுங்க. 2024-ல நீங்க போட்ட ஓட்டு ஓட்டு வந்து, எஸ்.ஆர்.-னாலதான் நீங்க வந்து ஓட்டு வந்தா இதுக்கு, திமுக-வுக்கு போட்டீங்க. எஸ்.ஆர்.-னால மாயமானதுல த வெகா வந்துட்டாங்களான்னு கேளுங்க. என்ன?

மக்கள் ஓட்டு போட்டுருக்காங்க, அதுக்கு மதிக்க வேணாம்?
சோ, இது வந்து இது ஒரு பெரிய சப்ஜெக்ட். எஸ்.ஆர்.-க்கும் தமிழ்நாட்டில் 2026 தேர்தல் தீர்வுகளுக்கும் சம்பந்தம் இல்லை.

இந்தியன் கவர்மென்ட்டுக்கு எதிரா 65% ஆப் வோட்ஸ் வந்து பதிவாயிருக்கு. சோ, ஆப்போசிஷன் பார்ட்டிஸ் எல்லாருமே யுனைடெட் ஆயிட்டாங்க அப்படின்னா அது டி.வி.கே.க்கு அப்போஸ் ஆயிடும். என்.டி.கே.வும் அவங்களோட ஜாயின் பண்ணிக்கணும்னு நினைக்கிறாங்க. ஏ.டி.எம்.கே. ஃபார்மர் மினிஸ்டர்ஸுமே ஏன் வந்து ஒன்றிணையக்கூடாது அப்படின்ற ஒரு கொஸ்டின்ல வந்து…

அது வந்து நீங்க அவங்களை கேட்கணுமா. அவங்க ஒன்றிணைக்கலாம், சேரலாம், சேராம போகலாம். அதெல்லாம் அவங்கதான் கேட்டுக்கணும்.
திமுக, அதிமுக சேரக்கூடிய ஒரு சூழ்நிலை வந்துருச்சுன்னா,

அப்ப நீங்க பார்த்துக்கோங்க. அப்ப தமிழ்நாட்டுல எவ்வளவு பெரிய புரட்சின்னு. ஏன் அவ்வளவு பயம்? அவங்களுக்கு என்ன அவ்வளவு பயம்? ஒரு அரசு உருவாயிருக்கு இதுவரைக்கும். ஏன் இன்னும் இன்னும் அவ்வளவு பயம்? இந்த ஆட்சியை கவிழ்க்கணும்னு. இன்னும் என்னென்னலாம் இருக்கு உள்ள? அதனாலதான் பயப்படுறாங்களா என பிரவீன் சக்கரவர்தி கூறினார்.