• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

நடுரோட்டில் தலையைத் தூக்கி சீறிய நல்லபாம்பு..!

BySeenu

Oct 28, 2026

​ கோவை, கோல்ட்வின்ஸ் பகுதியில் பிரதான சாலையைக் கடக்க முயன்ற நாகப்பாம்பு ஒன்று வாகன மோதியதில் காயம் அடைந்து, நடுரோட்டில் தலையைத் தூக்கிச் சீறிய சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை, அவினாசி சாலையில் உள்ள கோல்ட்வின்ஸ் பகுதியில் இன்று மாலை சுமார் 3:15 மணி அளவில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று திடீரெனச் சாலையைக் கடக்க முயன்று உள்ளது. அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாகப் பாம்பின் மீது மோதியதில் அதற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகப்பாம்பு, சாலையில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற வாகனங்களைப் பார்த்துத் தன் படமெடுத்து சத்தமாகச் சீறத் தொடங்கியது.

சாலையின் நடுவே நாகப்பாம்பு படமெடுத்துச் சீறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பும் பரபரப்பும் நிலவியது.

​அப்போது, அங்கு நின்று இருந்த வாடகைக்கார் (Taxi) ஓட்டுநர்கள் சற்றும் பயப்படாமல் சாதுரியமாகச் செயல்பட்டனர். காயம் அடைந்த பாம்பைப் பொதுமக்களுக்கும் மற்ற வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக மீட்டு, அருகில் இருந்த திறந்தவெளிப் பகுதிக்குச் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாம்பிற்கு ஏற்பட்ட காயம் குறித்தும், அதன் நடமாட்டம் குறித்தும் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

​தீவிரப் போக்குவரத்து நிறைந்த கோல்ட்வின்ஸ் பிரதான சாலையில் நாகப்பாம்பு நடுரோட்டில் படமெடுத்துச் சீறிய சம்பவமும், அதை டாக்ஸி ஓட்டுநர்கள் பத்திரமாக மீட்ட சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.