• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா..,

BySeenu

Oct 28, 2026

இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் மருத்துவர்களின் குடும்ப சங்கம நிகழ்ச்சி ஐ எம் ஏ அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குச் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். என். சுகுமார் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஐ.எம்.ஏ அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் ஏ. கே. ரவிகுமார், மேற்கு மண்டலத் துணைத் தலைவர் டாக்டர் சி. பி. சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

மருத்துவத் துறையில் ஆசான்களாக விளங்கும் ஆசிரியர்களைப் போற்றி கௌரவிக்கும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ பேராசிரியர்கள் என 40 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை ஐ.எம்.ஏ கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம், கௌரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன் மற்றும் நிதிச் செயலாளர் டாக்டர் ஆர். பாலமுருகன் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர். இதில் ஏராளமான மருத்துவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.