• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

வெள்ளக்கல் குப்பை கிடங்கு பாதையில் குப்பைகளை கொட்டும் லாரிகள் சிறைபிடிப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2026

மதுரை வெள்ளக்கல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பை லாரிகள் குப்பைகளை வழியிலேயே கொட்டிச் செல்வதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சிறைப்பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
​

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் மதுரை வெள்ளக்கல் பகுதியில் உள்ள மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது.
​இந்நிலையில், குப்பைகளை ஏற்றி வரும் தனியார் ஒப்பந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் குப்பை கிடங்கிற்குள் செல்லாமல், வெள்ளக்கல் கிராமப் பாதையிலேயே குப்பைகளை ஆங்காங்கே கொட்டிச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் குப்பை வாகனங்களைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
​தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றப்படும் என்றும், இனிவருங்காலத்தில் இதுபோன்று நடக்காது என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

​மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை:
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார் அவர்களிடம் கேட்டபோது, “சாலையில் குப்பைகளைக் கொட்டிச் செல்லும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சாலையில் தேங்கியுள்ள அனைத்துக் குப்பைகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்துக் குப்பைகளும் கிடங்கிற்குள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.