• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளி மருத்துவ மாணவரை தற்கொலைக்குத் தூண்டும் மருத்துவ பேராசிரியர் – மாணவரின் வைரல் வீடியோ..,

ByKalamegam Viswanathan

Oct 25, 2026

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையில் 3ம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர் அரவிந்த் குமார், உத்திரபிரதேசம் மாநிலம்அலிகார் மாவட்டம் அட்ருலி டினாப்பூர் பகுதியை சேர்ந்தசந்திர சிங் என்பவரின் மகன் அரவிந்த் குமார்

கடந்த 2023 ஆம் ஆண்டுமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக சேர்ந்தார்.மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர் அரவிந்த் குமார் தமக்குக் கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களால் கடுமையான மன உளைச்சலும் பாரபட்சமும் (discrimination) இழைக்கப்பட்டதாகக் கூறி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வீடியோவில் மாணவர் அரவிந்த் குமார் வீடியோவில் பேசியிருப்பதாவது:

தாம் எய்ம்ஸ் மதுரையில் 2023ஆம் ஆண்டு மாணவராகச் சேர்ந்ததாகவும், தற்போது மூன்று ஆண்டுகள் முழுமையாகிவிட்டதாகவும். தாம் ஒரு உடல் ஊனமுற்ற (physically challenged) மாற்றுத்திறனாளி மாணவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது இயலாமைகளைப் பொருட்படுத்தாமல், தனது அறிவுத் திறனை நம்பி படித்து வந்த தன்னை, எய்ம்ஸ் மதுரையின் ஆசிரியர்கள் (faculties) குறிப்பாக யுவராஜ் என்பவர்கள் கேலி செய்து கிண்டல் செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  

தனது வழிகாட்டியான (mentor) சுரேஷ் என்பவரின் அறிவுறுத்தலின்படி, முழங்காலிட்டு அனைத்து உடற்பயிற்சிகளின் முன்னேயும் மேடைகளின் முன்னேயும் தாம் கெஞ்சியதாகவும், ஆனாலும் அவர்கள் உடற்கூறியல் (anatomy) பாடத்தில் கவனம் செலுத்தாமல் மற்ற பாடங்களை முதலில் பாஸ் செய்யுமாறு கூறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.  

மருத்துவப் படிப்பில் நான்கு முயற்சிகள் (attempts) மட்டுமே உண்டு என்ற நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட தொடர் சிக்கல்களால் அந்த நான்கு முயற்சிகளும் முடிந்துவிட்டதாகவும், இதனால் தன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் கண்ணீர் மல்கக் கூறினார்.  

தனது கடுமையான சூழ்நிலையால் மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்டு psychiatric மாத்திரைகள் உட்கொண்டதன் விளைவாகக் கருக்கலைப்பு (miscarriage) ஏற்பட்டுள்ளதாகவும், தமக்கு தற்போது கடுமையான தற்கொலை எண்ணங்கள் வரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

  
மாற்று திறனாளி மருத்துவ மாணவர் அரவிந்த் குமாரின் உடல் ரீதியாக விமர்சனம் செய்து சர்ச்சையில் மருத்துவ பேராசிரியர் யுவராஜ் சிக்கி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி மாணவருக்கு நீதி வழங்கிட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாற்றுதிறனாளி மாணவர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.