தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் நாமக்கல்லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தை இணைக்கும் தேசிய அளவிலான அறிவியல் விழாவான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டின் (YASSC 2026) இரண்டாம் பதிப்பைத் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம் (TASS) நடத்துகிறது.
சென்னையிலுள்ள கணித அறிவியல் நிறுவனம் (IMSc), பெங்களூருவிலுள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST), அறிவியல் பலகை , எயிட்-இந்தியா மற்றும் ராமன் ஆராய்ச்சி அறக்கட்டளை (RRF) உள்ளிட்ட முன்னணி அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து இம்மாநாடு நடத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்களிடையே வானியல், விண்வெளி அறிவியல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதுமைச் சிந்தனை ஆகியவற்றில் ஆர்வத்தை வளர்ப்பதே YASSC 2026-ன் முக்கிய நோக்கமாகும். இளம் உள்ளங்களை ஊக்குவித்து, அறிவியல் ஆர்வத்தை வளர்த்து, எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புதுமையாளர்களாக உருவாக அவர்களைத் தூண்டுவதை இம்மாநாடு இலக்காகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 24ம் தேதி திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த மண்டல அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவிகள் வி. பிரியதர்ஷினி (U25ZOO019), பிரியதர்ஷினி. த
(U25CSC209), த. சிவியா (U25CSC266), கௌசல்யா.பா
(U25CSC124), கிருத்திகா.வீ (U25CSC123), கௌசல்யா.பா (U25CSC124), இ. கீத்தாஞ்சலி (U25MAT009), கிருத்திகா.வீ
(U25CSC123), க.லோ. ஷமிக் ஷா (U25CSC211), இ. ஹர்ஷிதா
(U2MAT010), த. கௌசிகா (U2MAT011), ரெ. நர்மதா
(U25MAT022), செ.கிருத்திகா (U25MAT019), அ.அனுஜா (U25MAT006), ரா. சுபாஷினி
(U24MAT010), பி. நந்தினி (U24MAT008), ச. மதுமிதா (U25CSC201), வெ. தர்ஷினி
(U25CSC263), க.சாந்தி மலர்
(U25CSC213), ரா. ஹேமனிஷா
(U25ECO020), த.பிரியா (U25CSC208), அ.யுவராணி (U25CSC218)
ஆகியோர் பங்கேற்று தங்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் பிரிவில் தங்களது படைப்பு திறனை வெளிப்படுத்தினர்.
இவர்களது படைப்புத்திறன் மாநில அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவிகளை கல்லூரி தலைவர், செயலாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், துறைதலைவர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.





