ஸ்ரீ கன்னிகா டிரேடிங் ஹவுஸ் (SKTH) நிறுவனத்தின் முதல் விநியோகஸ்தர்கள் சந்திப்பு, “3 TO INFINITY” என்ற தலைப்பில் கோவை விவாண்டா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர். நிறுவனத்தின் வளர்ச்சியைக் கொண்டாடுவதுடன், வணிக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் இச்சந்திப்பு அமைந்தது.

மூன்று தயாரிப்புகளுடன் தொடங்கிய SKTH நிறுவனம், தற்போது பல்வேறு தயாரிப்புப் பிரிவுகள் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது. சென்னை மற்றும் திருநெல்வேலியில் கிளைகளைக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், தனது விநியோக வலையமைப்பையும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. நிகழ்ச்சியில் சுகுணா குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவான சிவா டிரேடிங் ஹவுஸ் சார்பில் டிஷ்யூ பேப்பர் மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், கொங்கு டூரிஸ்டர் மற்றும் கேரி ஆன் பிராண்டுகளின் கீழ் டிராலிகள் மற்றும் பைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய தயாரிப்புகள் மூலம் விநியோகஸ்தர்களுக்குக் கூடுதல் வணிக வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா டிரேடிங் ஹவுஸ் நிறுவனத்தின் டிஷ்யூ பேப்பர் மற்றும் மெழுகுவர்த்தி உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த சிறந்த விநியோகஸ்தர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் முரளி,SKTH மற்றும் சிவா டிரேடிங் ஹவுஸ் நிறுவனங்களின் தலைவர் கே. நடராஜன், அவரது மனைவி சங்கரி நடராஜன், நிர்வாக இயக்குநர் விஜய் சிவராம், அவரது மனைவி ஹர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். “3 TO INFINITY” என்ற கருப்பொருள், மூன்று தயாரிப்புகளுடன் தொடங்கிய நிறுவனத்தின் பயணம் முடிவில்லா வளர்ச்சியை நோக்கிச் செல்வதைப் பிரதிபலிக்கிறது. விநியோகஸ்தர்களுடனான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தி, எதிர்கால வளர்ச்சியை எட்டுவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.



