• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்ற பொதுமக்கள்..,

ByP.Thangapandi

Oct 19, 2026

நாடு முழுவதும் ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகின்ற சூழலில்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து உசிலம்பட்டி சந்தை பகுதி, தேனி சாலை, தேவர் சிலை, பேரையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி எனத் தொடர்ந்து பண்டிகை நாட்களையொட்டி பூஜை பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.,

இந்நிலையில் உசிலம்பட்டி சந்தை பகுதி, தேனி சாலை, பேரையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய், வாழைப்பழம், பூக்கள், பழங்கள், பொரிகடலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் குவியத் தொடங்கி உள்ளது.,

இதனால் உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்கள் விறுவிறுப்பாக பூஜை பொருட்கள் வாங்குவதற்கு வந்த வண்ணம் உள்ளனர் இதனால் இப்பகுதி களை கட்டி உள்ளது.,