• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அப்துல்கலாம் பிறந்தநாள் முப்பெரும் விழா..,

ByKalamegam Viswanathan

Oct 16, 2026

மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் முப்பெரும் விழா நடைபெற்றது. இளைஞர் எழுச்சி நாள் விழா, அக்டோபர் மாதத்தில் பிறந்த மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரையாற்றினார்.
அவர் வழங்கிய மரக்கன்றை பள்ளியின் பசுமைப் படை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நட்டனர்.

ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை பிரசிடென்ஸி சார்பில் அக்டோபர் மாதத்தில் பிறந்த மாணவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி பரிசுகள் வழங்கி கொண்டாடினர். தலைவர் இளவரசன், செயலாளர் சொக்கர், துணை ஆளுநர் கார்த்திகேயன், மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்கள் டாக்டர் அப்துல் கலாம் அவர்களைப் போன்ற வேடமணிந்து உரையாற்றினர். அக்டோபர் மாதத்தில் பிறந்த மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைபெற்றது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.