மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானத்து ஊராட்சிக்கு உட்பட்ட ரயில்வே பீட்டர் 3- வது தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது., இங்கு பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் மூலம் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை கடத்துவதற்கு வழியின்றி தனி நபர்கள் தடுத்து அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.,

இதனால் கழிவு நீர் வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.,

மேலும் இந்த தெரு வழியாக சென்னை- போடி செல்லும் உசிலம்பட்டி ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையாகவும் அமைந்துள்ளது .,
இந்த நிலையில் இந்தச் சாலையும் குண்டும், குழியுமாகவும் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.,
இது குறித்து அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனை அதிகாரிகள் விரைந்து
ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,
மேலும் ரயில்வே பீட்டர் 1வது தெருவில் மழைநீர் தேங்கி வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது., மேலும் மழைநீர் தெருவில் தேங்குவதை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,



