• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரை பெருங்குடி பகுதியில் பழிக்கு பலியாக நடந்த கத்திக்குத்து..!

ByKalamegam Viswanathan

Oct 13, 2026

மதுரை பெருங்குடி பகுதியில் மளிகை கடையில் சூர்யா, மாரிமுத்து, மதுரை வீரன், முனீஸ்வரன் ஆகிய நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த அய்யனார் மற்றும் மாரி மற்றும் அவரது நண்பர் மூன்று பேர் சேர்ந்து சூர்யா நண்பர்களை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் சூர்யாவுக்கு தலையிலும், முனீஸ்வரனுக்கு கையிலும் கத்தியால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் திடீரென விமான நிலையம் சொல்லக்கூடிய சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதாக கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்து கலந்து சென்றனர்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கடந்த 2023 ஆம் ஆண்டு பெருங்குடி நாடக மேடை பகுதியில் சர்வின், கணபதி, விஜய் குட்டி, அஜித் உள்ளிட்ட ஐந்து பேர் நின்று கொண்டிருந்தபோது சரமாரியாக கத்தியால் தாக்கிச் சென்ற சம்பவத்திற்கு பழிக்கு பலியாக நடந்திருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறக் கூறி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.