அமைச்சராக பொறுப்பேற்று ஐந்து மாதங்களுக்குப் பின் திருப்பரங்குன்றம் தொகுதி (வளர்ச்சி)அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து முறை போட்டியில் தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில் வெற்றி பெற்று இழுபறிக்கு பின் ஆட்சி அமைத்தது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் விசிக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் த வெகஅணியில் இடம் பெற்றன

தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பின் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட அத்தாட்சியின் துணை பொதுச்சாளரும் தற்போது மின்சார மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஆன நிர்மல் குமார் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்று 5 மாதங்கள் ஆகியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் ஆலோசனை குறித்து எந்தவித முன்னேற்றம் இல்லை.
இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.அன்பழகன் அவர்கள்,திட்ட இயக்குநர்(ஊரக வளர்ச்சி முகமை) திரு. சதீஷ் பாபு அவர்கள், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) மரு. எஸ்.சுரேஷ் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து துறை பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் செய்தி எடுக்கச் சென்ற செய்தியாளர்களை அமைச்சர் நேரடியாகவே மைக் மூலம் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறி வெளியே செல்ல கூறினார்.
இரண்டு மணி நேரம் கழித்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் காலையிலிருந்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வருவதால் நாளை சந்திக்கிறேன் எனக்கூறி லாவகமாக சென்று விட்டார்.



