மதுரையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

இதனால் நவி மும்பையில் இருந்து 1:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 3:25 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலையில் வானிலை மாற்றம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமிட்டு பத்திரமாக 167 பயணிகள் தரையிறங்கியது 4.20 மணிக்கு

அதேபோல ஹைதராபாத்தில் இருந்து 3:00 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு 4:40 மணிக்கு தரையிறங்கும் மோசமான வானிலை காரணமாக உசிலம்பட்டி அருகே 40 நிமிடத்திற்கு மேலாக வட்டமடித்து 202 பயணிகளுடன் பத்திரமாக மாலை 5.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
அதேபோல சென்னையிலிருந்து 2:15 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் புறப்பட்ட இண்டிகோ விமானம் சரியாக 3:20 மணிக்கு கோவையில் தரையிறங்க வேண்டிய நிலையில் திடீர் கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமடித்து தரையிறங்க முடியாமல் மதுரை விமான நிலையத்தில் மாலை 4:10மணிக்கு அவசரமாக தரையிறங்கியது.
இந்த சென்னை கோயம்புத்தூர் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் வன்னியரசு உட்பட 158 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டனர். வானிலை சரியான பிறகு கோயம்புத்தூருக்கு மாலை 5:06 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மதுரை கோயம்புத்தூர் பகுதியில் தொடர் மழையினால் மோசமான வானிலை காரணமாக அடுத்தடுத்து மூன்று விமானங்கள் வானத்தில் வட்டமடித்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது தொடர்ந்து வானிலை சீரான பிறகு மீண்டும் விமான நிலையங்களில் பத்திரமாக தரையிறங்கியது.
கனமழை பெய்த மதுரை விமான நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று விமானங்கள் தரையிறங்கியதால் விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.



