• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா..,

ByKalamegam Viswanathan

Sep 16, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் 27 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி உற்சவ பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர் நேற்று முன்தினம் 14ஆம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது.

மாலை ஐந்து முப்பது மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது திருவிளக்கு பூஜையை தென்பாரத அமைப்பாளர் தர்ம ஜாக்ரன் ராஜசேகர் துவக்கி வைத்தார் சேவா பாரதி பொறுப்பாளர் மைவிழி திருவிளக்கு பூஜையை நடத்தினார்.

இரவு சக்தி கார்த்தி குழுவினரின் கிராமிய ஆன்மீக கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை யடுத்து நேற்று மாலை விநாயகர் ஊர்வலம் தொடங்கி நெடுங்குளம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

ஊர்வலத்தை சென்னையை சேர்ந்த தமிழ்நாடு சமுதாய ஒருங்கிணைப்பாளர் கேசவ விநாயகம் ஜி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை நெடுங்குளம்
கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.