• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மின்தடையை போக்க முதல்வர் போர்கால நடவடிக்கை எடுப்பாரா?-ஆர்.பி. உதயகுமார் கேள்வி..,

ByKalamegam Viswanathan

Sep 13, 2026

தவெக ஆட்சியின் 120 நாட்களில் அரசின் அலட்சிய போக்கால் தமிழகத்திற்கு தேவையான மின் தேவையை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருவது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது.

தற்போது தமிழகத்தில் மின் தேவை 21,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி சுமார் 5000 மெகாவாட் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால்,. பொதுமக்கள் பெரும் அவதி ஏற்பட்டுள்ளார்கள் குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றார்கள்

தமிழகத்தில் வழக்கமாக கோடைகாலத்தில் மட்டுமே மின் தேவை 20,000 மெகாவட்டை கடக்கும் என்றாலும், தற்போது செப்டம்பர் மாதத்திலேயே மின் நுகர்வு 21,000 மெகாவாட்டை தொட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இதற்கான ஆயத்தமாக தவெக அரசு எந்த விதமான முன் ஏற்பாடுகளும் செய்யவில்லை, பொதுவாக மின் தேவை அதிகரிக்கும் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே கணிக்க கூடியதாக இருக்கும் நிலையில் ,அதற்கேற்ப மின் உற்பத்தி மற்றும் மின்சார கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் முதன்மையான கடமையாகும்.

தற்போது மின் தேவைக்கும், கிடைக்கும் மின்சாரத்திற்கும் இடையே சுமார் 5000 மெகாவாட் பற்றாக்குறை இருப்பதாக தெரிய வருகிறது. தமிழகத்தின் தவெக ஆட்சி அமைந்த அடுத்தடுத்த நாட்களிலேயே மாநில முழுவதும் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

தற்போது காலாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்ற மாணவ மாணவிகளுக்கும் மின்தடை என்பது பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது .கடந்த பத்து தினங்களாக சென்னை, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, அம்பாசமுத்திரம், திருவள்ளூர் என்று தமிழக முழுவதும் பல பகுதிகளிலே மின்வாரிய அலுவலர்களின் முற்றுகை இட்டும் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்து பொதுமக்கள் போராட்டம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

மின்சாரத்துறை அமைச்சர் காற்றாலை மின்சாரம் தடைபட்டது தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டு கடந்து சென்று விட்டார். இன்றைக்கு அடிப்படையாக அவசர தேவையாக, அத்தியாவசிய தேவையாக இருக்கிற மின்சாரம் தவெக அரசு முழுமையாக அக்கறை செலுத்துகிறதா என்பதுதான் கேள்விதான் எழுந்திருக்கிறது .

முதல்வர் லண்டன் சென்று அவருடைய சமகால திரைப்பட கதாநாயகன், இளைஞர்களின் கனவு நாயகன் அஜித் குமார் அவர்களின் கார்ரேஸை அங்கே கொடியை சேர்த்து துவக்கி வைத்து, தனது அன்புக்குரியவர்களோடு அந்த கார்ரேஸை பார்க்கின்ற காட்சியும், இங்கே மின்தடை ஏற்பட்டு மக்கள் வீதிலே இறங்கி போராடுகிற காட்சியும் எதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது என்றால், தீ பற்றி எரிகிற போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பதை போல தமிழகம் இன்றைக்கு பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தள்ளாடி தடுமாறிக் கொண்டிருக்கிற நேரத்தில், அங்கே தன் அன்புக்குரியவர்களோடு தனது சமகால துறை கதாநாயகன் அஜித் குமார் அவர்களின் அந்த கார் பந்தயத்தை அவர் திறந்து வைத்திருக்கிற காட்சியும் இரண்டும் தமிழர் மக்களிடத்திலே முன்வைக்கப்பட்டு இருக்கிறது. .

அந்த செய்தி நமக்கு விளையாட்டு துறையில் ஊக்கம் அளிப்பதாக இப்பவே பாராட்டி வாழ்த்தி வரவேற்கிறார்கள். இங்கே இருக்கிற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு முதல்வர் ஏதேனும் போர்க்கால அடிப்படையிலே உத்தரவு வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏனென்றால் மிகவும் அத்தியாவசிய முதன்மையான தேவை மின்சாரம் என்பது முதல்வர் நன்றாகவே அறிவார்கள் மின்தடைக்கு விடை கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.