மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் போது உள்நோயாளிகள் ஆண்கள், பெண்கள் பிரிவு,டெங்கு தனிப்பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு உள்ளிட்டவை களைநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அங்குள்ள ஒரு ஜன்னலில் கண்ணாடி உடைந்த தால் அதற்கு அட்டை வைத்து அடைக் கப்பட்டு இருந்தது அதில் கொசுவலை வைத்து அடைக்குமாறு அறிவுறுத்தி னார்.அப்போது அவரிடம் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிமனு கொடுத்தனர்.அதன் பின்செய்தியாரை சந்தித்த அமைச்சர் அருண் ராஜ் கூறியதாவது:-சோழம்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இங்கு உள் நோயாளியை பிரிவில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சை பற்றி விசாரித்தோம் அவை சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை முதலிடம் கலந்து பேசி தேவையானவற்றை நிறைவேற்றி தருவோம். தற்போது மாவட்ட வாரியாக தாலுகா வாரியாக மருத்துவமனைகளில் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.வரும் காலங்களில் வாடிப்பட்டி அரசு மருத்து வமனைக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.
முன்னதாக அவருக்கு கருப்பையா எம்.எல்.ஏ.,தலைமை மருத்துவர் அதிகாரி தனசேகரன் தலைமையில் டாக்டர்கள் சிவக்குமார், நிர்மலன், முத்துலட்சுமி, கேஸ்ரோ, சித்தா டாக்டர் கவிதா, தலைமை செவிலியர் கலைச்செல்வி மற்றும் தமிழகவெற்றி கழக மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா,வழக் கறிஞர் அழகேசன் ஒன்றிய செயலா ளர் தமிழன் தாமு, தியாகராஜன், பேரூர் செயலாளர் பசுமணியன் மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமானோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.








