• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி தவெக திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மரியாதை..,

ByKalamegam Viswanathan

Sep 12, 2026

தியாகி இம்மானுவேல் சேகரனின் 69வது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் நிர்வாகிகள் கொரியர் கணேசன் ராஜேஷ் கண்ணா கேபிள் மணி கருப்பட்டி கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜெய்பிரகாஷ் ஆறுமுகம் செய்திருந்தனர். திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் துணைத் தலைவர் கண்ணன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி கேபிள் ராஜா சங்கங்கோட்டை ரவி சந்திரன், கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

ஒன்றிய துணைச் செயலாளர் ராமலிங்கம் பேரூர் துணைச் செயலாளர் தியாகு பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பட்டி தங்கபாண்டி முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் டிவிஎஸ் முருகன் எஸ் பி மணி பாலு விருகை தருமர் ஆறுமுகம் டாஸ்மாக் சுந்தர் பிரேம் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகளும் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.