முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இரு வழக்குகளில் அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க கோரி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் பாஸ்போட்டை வழங்க முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.








