கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் . கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தவெக சந்தித்த முதல் சட்டமன்றத்தில், நிறைவாக காவல் துறை மானிய கோரிக்கையில் முதல்வரின் பதிலுரைக்காக நாள் ஒதுக்கப்பட்டது,

முதல்வர் என்ன பேசுகின்றார் என காத்துக்கொண்டு இருந்தோம் என தெரிவித்தார்.
4 மாதங்களில் சட்ட ஒழுங்கை பாதிக்கும் செயல்கள் நடந்து இருக்கின்றது, கொலை,கொள்ளை, போதையினால் ஏற்படும் பாதிப்புகள் நடந்துள்ளது எனவும்,
கொலைகளை தடுக்கவும், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்களுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க போகின்றோம் என்பதை முதல்வர் விளக்குவார் என எதிர்பார்த்தோம் எனவும், இன்றைய சட்டமன்றத்தில் முதல்வர் பதிலுரை எதிர்பார்த்த வகையில் இல்லை என தெரிவித்தார்.
திமுகவை முழு முதலாக தாக்குவதற்கு இந்த் சட்டமன்ற நிகழ்வை பயன்படுத்தி இருக்கின்றார் எனவும், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை எனவும் ஆனால் திமுக மட்டுமே ஊழல் செய்துள்ளதா ?, 91-96 ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மீது டான்ஸி வழக்கு, பிளசன்ட்டே வழக்கு,சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என தெரிவித்தார்.

முதல்வர் விஜய் ஊழலை மையமாக வைத்து இருக்கும் பட்சத்தில் நடுநிலையோடு செயல் படுபவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார். விஜய் யாரை வைத்து ஆட்சி நடத்துகின்றார், ஸ்டாலினை முதல்வர் என சொல்லி வாக்குகளை வாங்கியவர்களை வைத்துக்கொண்டு, விஜய் ஆர்.எஸ்.எஸ் பிள்ளை என முத்திரையிட்டவர்களக
வைத்து கொண்டு பேசுவது சரியாக தென்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து வந்த சி.ஆர்.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரை வைத்துக்கொண்டு விஜய் ஊழல் எதிர்ப்பு பேசுவது சரியாக தெரியவில்லை எனக்கூறிய அவர், சட்டமன்ற நிகழ்வுகள் சினிமா பாணியில் இருக்கின்றது , மரபு படி இல்லை என தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் புராணத்தை எத்தனை தடவை பாடுவீர்கள் , இதன் மூலமாக லாபம் பண்ண என்ன இருக்கு? என கேள்வி எழுப்பிய அவர்,தவெக ஆட்சியில் நடக்கும் சம்பவங்களுக்கு என்ன பதில் ? அமலாக்க துறை மாதிரியான மத்திய ஏஜென்ஸி தாக்கல் செய்யும் ஆவணங்களை வைத்து குற்றவாளி,நிரபராதி என்று முடிவு செய்ய முடியாது. தமிழக அரசியல் தமிழக சட்டமன்றத்துடன் முடிந்து விடாது. சட்டமன்றத்திற்கு வெளியில்தான் மக்கள் சக்தி இருக்கின்றது. மக்கள் மன்றம் இருக்கின்றது.
சட்டமன்றத்தில் பேசுவதால் என்ற பலன் . வெறும் வாய்சவடால் எதற்கு?
யாராவது தவறு செய்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாமே இந்த பேச்சு
ஆதரவாளர்களை குஷிபடுத்ததான் உதவும். ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுதானே.விஜயிடம் ஏதோ ஒரு பலகீனம் இருக்கின்றது. குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் எண்ணம் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கலாம்.வேறு ஏதோ நோக்கம் இருக்கின்றது. ஊழல் ஒழிப்பு என்றால் திமுக மட்டும்தான் ஊழலா.?முதல்வரின் பேச்சு ஒரு தலைபட்ச பேச்சாகவும் செயல்படாகவும் இருக்கின்றது.

ஜெயலலிதா சிறையில் இருந்த்து தெரியதா ? ஊழல் ஒழிப்பா ? திமுக எதிர்ப்பு? எல்லா ஊழலையும் பேச வேண்டும் சர்க்காரியாவை பேசுபவர்கள்,91-96 ஜெயலலிதா ஊழலை ஏன் பேசுவதில்லை விஜய் முதல்வராகி விட்டதை உணர்ந்ததாக தெரியவில்லை
தேர்தல் கால ஆலோசகர்கள் மட்டுமே அவரிடம் நெருங்கி இருக்கின்றனர். பவர் சென்டர்கள் இருப்பது நாட்டுக்கு ஆபத்து.ஐ.ஜி x நேரடியாக முதல்வரிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.
வேறு நபர்கள் மூலம் தகவல் சொல்லி , அவர்கள்தான் எடிட் செய்து தகவல்களை முதல்வரிடம் கொண்டு செல்கின்றனர் விஜய்க்கு முதலமைச்சர் என்ற உணர்வு வராமல் தடுப்பது பவர் சென்டர்கள்தான் இது முதல்வரிடம் இருக்கும் பெரிய குறை சட்டமன்றத்தில் இன்று சரியாக செயல்படாமல் போனதற்கு இதுதான் காரணம் பவர் சென்டர் இல்லை என அவர் சொல்லலாம். ஆனால் அதுதான் உண்மை.








