மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ் வயது 45 இவர் அங்குள்ள கிணற்றில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேலே வர முடியாமல் உயிருக்கு போராடி சத்தம் போட்டு உள்ளார் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது மேலே வர முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சோழவந்தான் தீயணைப்புத்துறையினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவராஜை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் சரியான நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.









