மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பிரதான சாலையில் காமராஜர் நடுநிலை பள்ளி எதிரே உள்ள தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அதிகாலையில் தெருவின் முன்பகுதியில் உள்ள வீட்டின் சுவரில் திடீரென மர்மநபர் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். சத்தம் கேட்டு அருகே வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் சுவற்றில் தீ பற்றி எரிந்துள்ளது

பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டில் சுற்று சுவர் எரிந்துள்ளது மேலும் தெருவில் நின்று கொண்டிருந்த டூவீலரில் லேசாக தீ பற்றியது உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.பின்னர் அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தேடி வருகின்றனர். மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசும் பொழுது அவரது தலையிலும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
முன் விரோதத்தால் நடந்திருக்குமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் தற்போதும் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது சோழவந்தான் பகுதியில் இது போன்று தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு எதிரே நள்ளிரவில் மர்ம நபர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தானில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். காவல்துறை உரிய விசாரணை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








