மதுரை திருப்பரங்குன் தொகுதி குட்பட்ட ஐவராத நல்லூர் 41 வது வார்டு பகுதியில் தவெக கட்சி சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

விழாவில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அமைச்சர் நிர்மல் குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பின் உடனடியாக புறப்பட்டு சென்றார் த வெக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
ஏராளமானபெண்கள் முண்டியடித்துக் கொண்டு மேடைக்கு செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதில் ஒரு மூதாட்டி விழா மேடையிலேயே மயங்கி விழுந்தார் உடனடியாக கட்சி நிர்வாகிகள் அவரை சேரில் அமர வைத்து சேலையால் விசிறினர் .
மேலும் சிலர் கீழே இருந்துமேடைக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் சிக்கி தவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டாம் என அறிவுருத்தியதின் பேரில் நலத்திட்ட சேலைகள் வழங்கியதை பின்னர் நிறுத்தினர்.

சேலைகள் அடங்கிய சாக்கு பண்டலை அருகில் இருந்த கடையில் வைத்தனர்.
மேலும் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம்
நாளை காலை வீட்டில் வந்து வழங்கப்படும் என விழா மேடையிலேயே பைக் மூலம் அறிவித்தனர்.

மேலும் கூட்டமாக இருந்து கலைந்து செல்லாததால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேலைகளை அருகில் உள்ள கட்டிடத்தில் கொண்டு போய் வைத்தனர்.
தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சேலை கிடைக்கும் என்று நம்பிக்கையில் வந்திருந்தனர். கூட்டம் மிகுதி காரணமாக கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாததால் சேலை வழங்கும் நிகழ்ச்சியை பாதியிலேயே த வெக கட்சியினர்முடித்தனர்.




