• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தவில்லை கருப்பையா எம்.எல்.ஏ., விளக்கம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி.அந்த தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்ப து வரலாற்று உண்மை அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஜல்லிக்கட்டு நான் பிறந்த மண்ணின் வீர விளையாட்டுஅதை நான் எப்படி இழிவு படுத்துவேன். 2006 ல் தி.மு.கஆட்சி காலத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ஜல்லிக்கட்டுக்கு முதன் முறையாக தடை விதிக்கப்பட்டது. 2011 ல் அ.தி.மு.க ஆட்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தை நாடியதால் நான் சட்டமன்ற உறுப்பினரான பின் எனது தலைமையில் பாரம் பரியம் மிக்க அலங்கா நல்லூர் பாலமேட்டில் விதிமுறைபடி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இன்றளவும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன் நாளில் ஜல்லிக்கட்டு நடத்துவது மகிழ்ச்சி தான். தமிழர்களின் வீரத்தை என்றும் போற்றி தலை வணங்குவேன்.
ஆனால் நான் சட்டசபையில் கூறியது என்னவென்றால் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிதி இன்றி மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்குவதற்கு ரூ.50 கோடி நிதி தேவைப்படும் நிலையில் தற்போது எந்த நிகழ்வும் நடக்காமல் யாருக்கும் பயனின்றி ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஏறு தழுவுதல் அரங்கம் கட்டபயன்படுத் திய நிதியை சர்க்கரை ஆலை திறக்க உதவி இருக்கலாம் என்ற கருத்தை தான் கூறினேன்.

மேலும்பொங்கல் மற்றும் கோவில் திருவிழாவில் வாடிவாசலில் சீறி பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரப் படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாச்சாரத்திற்கு முரணானது.
இதில் ஏறு தழுவுதல் அரங்கு கட்டப்பட்ட பின் ஜனவரி மாதம் பொங்கல் விழா அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக் கட்டு நடந்த பிறகு கடந்த ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள் பள்ளி, கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு வளர்ப்பதிலும், ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்தனர். இதை கண்ட பெற்றோர்கள் வேதனையடைந்தனர்.திருவிழா காலங்கள் தவிர மற்ற நாட்களில் ஏறுதழுவுதல் அரங்குக்கு சென்று பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்களே என்பதை
மனதில் கொண்டு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சட்டமன்றத்தில் பேசினேன்.

ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இழி வாகக் கூறவில்லை. பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பின் அரசு தனியார் வேலைக்கு சென்று கொண்டும் சொந்தமாக தொழில் செய்து குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு வளர்க்கும் இளைய சமுதாயத்தினரை பற்றி கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப்படி கூறினேன். இதில் இளைய சமுதாயத் தினரின் மனது புண்படும் படியாக இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.