சென்னை: எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பெருங்காயம் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தடை விதித்துள்ளது.

எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பிராண்டில் தயாரிக்கப்படும் பெருங்காயத்தாள் தரமற்றவையாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெருங்காயத்தின் தரம் குறித்து நுகர்வோர் அளித்த புகாரைத் தொடர்ந்து முதற்கட்ட ஆய்வுப் பரிசோதனையில், எவரெஸ்ட் மற்றும் எல்ஜி ஆகிய இரு நிறுவனங்களின் பெருங்காயப் பொருட்களும் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சந்தையில் தற்போது உள்ள தரமற்ற தயாரிப்புகளை அனைத்தையும் தாமாகவே முன்வந்து திரும்பப் பெறுமாறும் (Voluntary Recall) சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




