• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

திட்டமிட்டபடி RRR படம் வெளியீடு

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஜனவரி 7ம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இதனிடையே, ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சில தெலுங்கு மீடியாக்களில் இப்படத்தை ஓடிடி தளத்தில் ‘பணம் செலுத்தி பார்க்கும் முறை’ மூலம் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. அவற்றை படக்குழு மறுத்துள்ளது.

திட்டமிட்டபடி ஜனவரி 7ம் தேதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்கள் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வியாபாரமும் மிகப் பெரும் அளவில் நடந்துள்ளது.


இன்று மாலை சென்னையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.