• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஜனநாயகம் திரைப்படம் வெளியீடு கருப்பையா எம்எல்ஏ பாலாபிஷேகம் செய்து 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்..,

ByKalamegam Viswanathan

Jul 24, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வி தியேட்டரில்
தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகம் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களுக்காக காலை 9 மணிக்கு நடைபெறும் ஷோவிற்காக சோழவந்தான் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கொரியர் கணேசன் ஏற்பாட்டில் சுமார் 500 நபர்களுக்கு இலவசமாக டிக்கெட் எடுத்து படம் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

தென்கரை வைகை ஆற்று பாலம் முதல் முள்ளிபள்ளம் திரையரங்கு வரை செண்டை மேளம் பொய்க்கால் குதிரை ஆட்டம் மயிலாட்டம் போன்ற ஆட்டம் பாட்டங்களுடன் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர் அதனைத் தொடர்ந்து திரையரங்கு வளாகத்தில் இருந்த தமிழக முதல்வர் விஜய் அவர்களின் கட் அவுட்ற்கு சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பாலாபிஷேகம் செய்து 52 கிலோ கேக் வெட்டி முதல் ஷோவான ரசிகர் ஷோவை கருப்பையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகி கொரியர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்