• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வசீகரமாக பஞ்ச் டயலாக் பேசி மக்களிடையே மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்து விட்டார்..,

ByKalamegam Viswanathan

Jul 10, 2026

மதுரை சோழவந்தான் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தவெக-வில் இணைந்ததை தொடர்ந்து இன்று திருவேடகம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக புதிய ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

பின்னர் இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி மட்டன் சுக்கா சிக்கன் கரண்டி ஆம்லெட் என பத்து வகை அசைவ உணவுகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிய செயலாளர் பெரியசாமி மணி ஏற்பாட்டில் விருந்தை முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது

வசீகர வசனத்தில் பஞ்ச் டயலாக் பேசி மக்களிடையே மயக்கத்தை ஏற்படுத்தி மகுடிக்கு மயங்குகிற நிலையை உருவாக்கி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது விஜய் அரியணையை பயன்படுத்தி அதிமுகவை அழித்து விடலாம் என்ற பகல் கனவு பழிக்காது.

பதவியேற்ற இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி சீர்கெட்டு போய் விட்டது பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அவரது அமைச்சர் கில்லி சரத்குமார் என்பவரே போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளார்.

தூய்மையான ஊழலற்ற ஆட்சி தருவோம் என கூறிவிட்டு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்வதில் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஏறத்தாழ 120 கோடி லஞ்சமாக பெறப்பட்டது உண்மையா என முதல்வர் விசாரணை நடத்தி விளக்கி சொல்ல வேண்டும்.

மதுபான விலையை உயர்த்த மதுபான ஆலை உரிமையாளர்கள் 11 பேரிடம் 800 கோடி ரூபாய் லஞ்சம் பெறபட்டுள்ளதாக குற்றசாட்டு வெளிவந்தது உண்மை செய்தியா என உண்மை தன்மையை விளக்க வேண்டும்.

நிதியமைச்சர் உடன்பிறந்த சகோதரரை தாக்கிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அதே போல் போதைப்பொருள் பயன்படுத்திய சர்ச்சை தொடர்கிறது. பல அமைச்சர்கள் பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் மோகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி சிதைகின்ற அட்ராசிட்டியில் ஈடுபடுகின்றனர்.

காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பள்ளி மாணவிகளிடம் அருவருத்தக்க சம்பவம் வேதனையளிக்கிறது. கேள்விக்குறியாகியுள்ளது.

108 இடத்தில் நீங்கள் வென்று தவெக பெரும்பான்மையை நிருபிக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆபர் கொடுத்து ராஜுனமா செய்யும் படலம் குதிரை பேரம் இன்றைய அரசியலில் மிகப்பெரிய ஜனநாயக விரோத போக்கு செயல்படுகிறது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இருப்பிடத்திற்கே சென்று எடப்பாடி பொதுச்செயலாளர் என்று “ஏ “பார்ம் “பி “பார்ம் என கையெழுத்து பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளீர்கள் தற்போது தங்களது பதவியை ராஜுனமா செய்து விட்டு தவெக அரசுக்கு ஆதரவளித்தால் அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி இருப்பிடத்திற்கு சென்று பொன்னாடை போர்த்தி வாக்குறுதி கொடுத்து தற்போது அவர்களை நம்ப வைத்து ஆட்சியில் அமர்ந்தவுடன் தற்போது திடீரென அதிமுக MLA ராஜினாமா என செய்தனர்.

தொடர்ந்து ராஜீனமா படலம் தொடர்கிறது அவருக்கு பெரும்பான்மைக்கு தேர்தல் ஆணைய விதிமுறை மீறி தேர்தல் சட்டமீறல் மீறி கூட்டணி என்ற பெயரில் சிலர் சேர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்று சிலர் மௌன சாமியார் போல் உள்ளனர்.

வைகோ கட்சி 2 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்தால் இடைத்தேர்தலில் அவர்களுக்கு வைகோவே பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார். இது அப்பட்ட குதிரை பேரம் என பேசப்பட்டதால் வைகோ அந்தர் பல்டி அடித்து விட்டார்.

தமிழக ஆளுநர் குதிரை பேரத்தை அனுமதிக்க முடியாது என்றார். ஆனால் அப்பட்டமாக விஜய் தேர்தல் விதியை மீறுகிறார். மதுரையில் ஆளுநர் வருகை தந்து ஆய்வு செய்துள்ளார்.

தவெக மைனாரிட்டி கூட்டணி அரசு தொடர்ந்தால் 356 சட்டம் பாயுமா என்பது கேள்விக்குறி. அமைச்சர் நிர்மல்குமார் 5 வருடத்தில் 5 கட்சி மாறியவர், ஆதவ் அர்ஜீனா 3 கட்சி மாறியவர் அவர்களை முதல்வர் விஜய் கண்காணிக்க வேண்டும்.

முரன்பாடின் மொத்த உருவம் தான் தவெக கூட்டணி.

தேர்தலுக்கு முன் ஸ்டாலின் தான் முதல்வர் என வைகோ பேசினார் தற்போது விஜய் தான் நிரந்தர முதல்வர் என கூறுகிறார்.

இந்த அரசு 5 ஆண்டுகள் முழுமை பெறாது கூட்டணி கட்சி எந்த நேரத்திலும் நிராத பானி யாக விட்டு செல்வார்கள் அது முறையற்ற, முரண்பாடற்ற கூட்டணி ,

வசீகர சினிமா பஞ்ச் டயலாக் பேசியதால் மக்கள் மயங்கி விட்டனர், தவித்து வருகின்றனர் விஜய் பேசியதற்கும் செயல்படுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை,

மேகதாது அணை பிரச்சனை குறித்து பேசவில்லை பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, 125 நாள் திட்டத்தை ஒப்புதல் கொடுத்து விட்டார் ஆனால் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் எதையும் பேசவில்லை பேச மாட்டார். அவருக்கு சுயமாக பேச தெரியாது. தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு தகராறு. இடைத்தேர்தலில் மக்கள் நிழல் எது நிஜம் எது என கண்டுபிடிப்பார்கள். அதிமுகவை விஜய் என யாரும் அழிக்க முடியாது.

ஒடுகாலிகள் 2 பேர் போனால் அதிமுக அழியாது மீண்டும் அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் வரும் என்றார்.