• Sun. Jul 5th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 5, 2026

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள பேருந்து நிலையம் ஆனது பெரியார் பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் திருமங்கலம் உசிலம்பட்டி வத்தலக்குண்டு சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து திரும்பிச் செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர் மேலும் பேருந்து நிலையம் அருகிலேயே அரசு மருத்துவமனை மற்றும் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பொதுமக்கள் மாணவ மாணவிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மருத்துவமனை மற்றும் பள்ளிகள் இருக்கும் நிலையில் பேருந்து நிலையத்தின் ஆக்கிரமிப்புகளால் நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது மேலும் பேருந்து நிலையத்திற்குள் இருந்த நிழற்குடை வணிக நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகையால் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் பேருந்து நிலையத்திற்குள் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி பொதுமக்கள் மற்றும் பயணிகள் ஓட்டுநர்களின் சிரமங்களை குறைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.