• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீதித்துறை, மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம்..

நல்லாட்சி குறியீட்டில் நிதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.


நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் ஆண்டு நல்லாசி குறியீட்டை டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் நேற்று வெளியிட்டார்.

இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவில் ‘ஏ’ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா கடந்த ஏழு ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு வழங்கி வரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர். மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெற தொடங்கியதால் 2014ஆம் ஆண்டு முதல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.


உதாரணமாக கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் இது தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் என்று பேசினார். மேலும் நீதித்துறை பாதுகாப்பில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. சுகாதாரத்தில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சுற்றுச்சூழலில் கேரளாவுக்கு முதலிடமும், மனிதவள மேம்பாட்டுத் துறையில் பஞ்சாப்புக்கு முதலிடமும், விவசாயத்துறையில் ஆந்திராவுக்கு முதல் இடமும் கிடைத்துள்ளன என்று அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.