• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சர்ச்சையில் சிக்கி இருக்கும் ‘மதுபன்’ பாடல்…சன்னி லியோன் மீது புகார்

Byகாயத்ரி

Dec 25, 2021

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ள “மதுபன் மே ராதிகா நாச்சே” என்ற பாடலில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் ஆபாச நடனம் ஆடியுள்ளதாக, விருந்தாவனத்தைச் சேர்ந்த சாந்த் நாவல் கிரி மகராஜ் என்கிற சாமியார் பரபரப்பு புகார் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ள இந்த பாடல் ஆல்பம், யூடியூப்பில் வெளிவந்த உடனேயே, பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. முன்னதாக, இந்த பாடலுக்கு நெட்டிசன்கள் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து வருவது ஒரு புறம் இருக்க, இப்போது சாமியார்கள் பாடலை தடை செய்ய வலியுறுத்தி வருகிறார்கள்.

கனிகா கபூர் பாடிய இந்தப் பாடல் டிசம்பர் 22 அன்று வெளியானது.
இது ஏற்கனவே பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மற்றும் மீனா குமாரி நடித்த ‘கோஹினூர்’ திரைப்படத்தில் முகமது ரஃபியின் ‘மதுபன் மே ராதிகா நாச்சே’ பாடி வெளியான, பாடலின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இந்த பாடலின் அசல் பாடல் 1960 இல் வெளியிடப்பட்டது.

இன்றுவரை இப்பாடல் மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் விருந்தாவனத்தைச் சேர்ந்த சாந்த் நேவல் கிரி மஹராஜ், இந்த விவகாரத்தில் சன்னி லியோன் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளார். இதனுடன் மதுபன் பாடலை விரைவில் தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இருவரது கோரிக்கைகளுக்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் கூறியுள்ளார். ‘மதுபன் மே ராதிகா’ பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியதன் மூலம் சன்னி லியோன் தங்களது மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அவர் தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதே போல் சன்னி லியோனின் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்று விருந்தாபன் பகுதியைச் சேர்ந்த சந்த் நேவல் கிரி மகராஜ் கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.