• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோவை அழைத்து வந்ததால் மாணவ குழந்தைகள் மகிழ்ச்சி..,

BySeenu

Mar 2, 2026

கோவை மாவட்டம் பாலத்துறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ குழந்தைகளை Rotary club of monarks Udaan 3.0 திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து ரயில் மூலமாக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் பெங்களூரில் உள்ள அறிவியல் கண்காட்சி,அருங்காட்சியங்கள்
போன்ற இடங்களுக்கு மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்த அழைத்துச் சென்று அதனைப் பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.பின்னர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு 40 பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர் அவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன் சண்முகம்,சுதாகர்,ஆசிஸ் அகர்வால் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாணவ மாணவிகள் கூறுகையில்:-

பள்ளிப் பாட புத்தகத்தில் கண்ட காட்சிகளை நேரில் சென்று பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதுவரை தரையில் இருந்து வானத்தை நோக்கி விமானத்தை கண்டு ரசித்த நிலையில் தற்போது விமானத்தில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உற்சாகமாக தெரிவித்தனர்.