• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்-பொன்.பாலகணபதி பேட்டி..,

ByKalamegam Viswanathan

Feb 25, 2026

மார்ச் ஒன்றாம் தேதி மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்  கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி கூறுகையில்:

ஒன்னாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய இரண்டாவது பொதுக்கூட்டமானது மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இன்றைய எதிர்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய நாளைய தமிழகத்தினுடைய முதல்வராக வரவிருக்கக்கூடிய பாசத்திற்குரிய அண்ணன் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் உட்பட அனைத்து கூட்டணிக் கட்சியினுடைய தலைவர்களும் இங்கே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டுத் திடலானது மிகப்பெரிய அளவிலே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 120 ஏக்கர் நிலமானது இன்றைக்கு சமப்படுத்தப்பட்டு இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களுமே மாநாட்டுப் பந்தலை ஒட்டியே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு பிரம்மாண்ட முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுல நாங்கள் குறைந்தபட்சம் லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்கே வருகையை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சியினருக்கும் மிகப்பெரிய அளவிலே ஒருங்கிணைப்பு ஏற்பட்டு, அந்தந்த தலைவர்கள் தங்களது கட்சியினுடைய தொண்டர்கள் அனைவரும் மிகப்பெரிய எண்ணிக்கை அளவிலே இந்த கூட்டத்திலே கலந்து கொள்ள வேண்டும் என்று உற்சாகமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் வரக்கூடிய இந்த ஒன்னாம் தேதி பொதுக்கூட்டம் முடிந்ததற்கு பின்பாக தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழவிருக்கும். மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதற்கு முழு மூச்சாக உறுதியோடு இருப்பார்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதற்கு இந்த பொதுக்கூட்டமானது ஒரு மிகப்பெரிய முன்னேற்பாடாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பார்க்கிங் இடம் பற்றிய கேள்விக்கு:

மொத்தம் ஒரு 120 ஏக்கர் கையகப்படுத்தியிருக்கோம். இந்த 120 ஏக்கர்ல் உட்காருவதற்கு தேவையான இடங்கள் தவிர உள்ளேயே ஏன்னா பிரதமர் வரும்பொழுது அவருடைய கான்வாய் பிரச்சனை இருக்கும்.

அந்த கான்வாய் பிரச்சனை இடையூறு வராத அளவுக்கு நம்ம அங்கிருந்து கன்னியாகுமரியிலிருந்து வரக்கூடிய – அதாவது இங்கிருந்து வரக்கூடிய வாகனங்களும், இங்கிருந்து வரக்கூடிய இந்த இரண்டு பைபாஸ்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் பிரைம் மினிஸ்டர் கான்வாயில் கொஞ்சம் கூட நமக்கு வந்து தொந்தரவு இல்லாத அளவிற்கு நம்ம வாகன வசதி நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு.

திருப்பரங்குன்றம் போறதுக்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு:

கண்டிப்பா, பாரதிய ஜனதா கட்சி பிரதமர் அவர்கள் திருப்பரங்குன்றம் வரவேண்டும் அப்படிங்கிற ஒரு கோரிக்கை நாங்கள் வைத்திருக்கிறோம். பிரதம மந்திரிடம் நாங்கள் வைத்திருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்களிடத்திலும் நாம இந்த கருத்தை நாம சொல்லியிருக்கோம். எல்லோரும் கூடி நமக்கு மாண்புமிகு பிரதமர் அவர்களிடத்திலே கோரிக்கையாகச் சொல்லியிருக்கிறோம். வருவதைப் பற்றி பிரதமர் அலுவலகம் நிச்சயமாக முடிவெடுப்பார்கள். அவர்கள் முடிவெடுத்ததற்குப் பின்பாத்தான் இதனுடைய இறுதியான நிலைப்பாடு என்னவென்பது தெரியும்.

வெயில் அதிகமா இருக்கு, வர்ற தொண்டர்களுக்கு ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு:

வரக்கூடிய தொண்டர்களுக்கு வந்து நமக்கு உள்ளுக்கு வந்து வாட்டர் பாட்டில் கொண்டு போறதுக்கு எப்பவுமே அலோவ் பண்ண மாட்டாங்க, பிரதமருடைய பாதுகாப்புக்காக வந்து இது வந்து பொதுவாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். அப்படிங்கிறப்ப வரக்கூடிய தொண்டர்களுக்கு நம்ம வந்து குடிப்பதற்கு குடிநீர் உள்ளேயே ஏற்பாடு செய்திருக்கிறோம். வெளியில் மோர்பாக்கெட், குளிர்பானங்கள் வசதி செய்து கொடுப்பதற்குரிய எல்லா ஏற்பாடுகளுமே இங்க இருக்கு.

அதுமட்டுமில்லாமல் வரக்கூடிய தொண்டர்களுக்கு  ஏதாவது இருந்தாக்கூட நமக்கு வந்து மொபைல் டாய்லெட் நம்ம ஏற்பாடு செய்திருக்கிறோம். பெண்களுக்குத் தனியான மொபைல் டாய்லெட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  இந்த முறை வந்து நம்ம பார்க்கிங்லையும் சரி, தொண்டர்கள் அமரக்கூடிய இடத்திலயும் சரி, இளைஞரணியும் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியினுடைய ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அங்க வந்து பொறுப்பாய் இருந்து நமக்கு வந்து வேலை பார்ப்பார்கள்.

வரக்கூடிய தொண்டர்கள் கொஞ்சம் வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கும், ஏதாவது கொஞ்சம் உடல்நிலை சரியில்லாம போய் திடீர் மயக்கம் விழுந்தாலோ, இல்லை வேற ஏதாவது முதலுதவி தேவைப்பட்டாலோ செய்வதற்கு நம்முடைய மாநில மருத்துவர் அணி குழுவினுடைய தலைமையில நல்ல முறையில ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நமக்கு இங்க ஒரு மருத்துவ முகாம் எல்லாம் அமைக்கப்பட்டு இருக்கிறது,

ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டிருக்கிறது. எல்லா அடிப்படை வசதிகளும் தேவையான அடிப்படை வசதிகள் இந்த மாநாடு எப்படி சிறப்பாக நடக்க வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடப்பதற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் நம்ம முழுமையாகச் செய்திருக்கிறோம்.

குழந்தைகளோட வர்றவங்களுக்கு அனுமதி குறித்த கேள்விக்கு:

குழந்தைகளோட வர்றதுங்கிறது நல்ல வெயில் காலமாக இருக்கிறதுனால குழந்தைகளை அதிகபட்சம் கூட்டிட்டு வரவேணாம் என்று நாங்கள் தொண்டர்கள்ட்ட சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக இந்த மாதிரி ஒரு சின்ன பிரச்சனை இருக்காதுங்கிறது தான் நம்ம விரும்புறோம்.

இது வெயில் காலமா இருக்கு அதே டைத்துல வந்து நமக்கு வந்து ஒரு மாலை நேரத்தில்தான் நமக்கு நிகழ்ச்சியானது நடைபெற இருக்கிறது. இருந்தாலும் கூட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதுனால குழந்தைகள் வர்றதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்பதையே நாங்கள் ஒரு வேண்டுகோளாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாங்கள் வைத்திருக்கிறோம்.

அரசு நிகழ்ச்சி இருக்குன்னு சொல்லியிருக்காங்க, எங்க நடக்கப் போகுது? என்ன நிகழ்ச்சி:

நம்ம எய்ம்ஸ்-னுடைய புதிய கட்டிடத்தினுடைய திறப்பு விழா நிகழ்ச்சியானது இருக்குது அப்படிங்கிற மாதிரியான ஒரு தகவல் வந்து பத்திரிகைக்காரங்க நீங்க சொல்லியிருக்கீங்க. நாங்களும் அதைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். முறையா இருக்குது அப்படிங்கிற பட்சத்தில் தெளிவான முடிவோட எங்கள் மாநிலத்தினுடைய தலைவர் உறுதியாக உங்களுக்கு நேரடியாகக் கூப்பிட்டுச் சொல்லுவார்

போக்குவரத்து எப்படி என்னென்ன பகுதியில அலார்ட் பண்ணியிருக்கீங்க:

நமக்கு போக்குவரத்து வந்து நமக்கு மதுரையில் இருக்கக்கூடிய அந்த ரவுண்டானாதான் மெயின் பகுதிங்க. இந்த சரவுண்டிங்ல இருந்து வர்றவங்களுக்கு ஒன்னு திருமங்கலம் ரவுண்டானாவைத் தாண்டி வரக்கூடிய இடம். நம்ம விருதுநகர் மாவட்டம், தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருக்கக்கூடியவங்க, அருப்புக்கோட்டையில் இருந்து வரக்கூடியவங்க, திருமங்கலம் பகுதியிலிருந்து வரக்கூடியவங்க எல்லாம் ரவுண்டானா வழியாக வந்து நம்ம சின்ன உடைப்பு வழியாக நேரடியாக உள்ளே போய் நமக்கு பார்க்கிங்கிற்குப் போவாங்க.

இங்கே நமக்கு தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை அதுக்கப்புறம் மதுரையில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுமே நேரடியாக நம்ம மதுரை-ராமேஸ்வரம் ரோடு பைபாஸிலிருந்து அங்கே கடந்து நேரடியாக வந்து லெப்ட்ல இருக்கக்கூடிய இதுல போவாங்க. மதுரையிலிருந்து உள்ளூரிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் ஃபுல்லா நமக்கு அவனியாபுரம் வழியாக வந்து வர்றதுக்கு உள்ளுக்கு கட் ரோடு ஒரு மூணு நாலு ரோடு இருக்கு. எந்த காலகட்டத்திலும் பிரதம மந்திரியினுடைய அந்த போக்குவரத்து கான்வாய் வந்து நமக்கு இந்தத் தடவை கொஞ்சம் கூட டிஸ்டர்பன்ஸ் இல்லாத அளவுக்குத்தான் நம்ம வாகனப் போக்குவரத்தையும் நம்ம வாகன பார்க்கிங்கையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அதனால இதுல எந்த விதத்திலும் சிறு குழப்பமும் சின்னச் சின்ன இது கூட வராத அளவுக்கு நம்ம ஏற்பாடு பண்ணியிருக்கோம். காவல்துறையினர் நமக்கு இதுல வந்து முழு ஒத்துழைப்பைக் கொடுத்திருக்காங்க.

அவங்களுமே கரெக்டா வந்து பார்க்கிங் இடத்தை பார்த்து செட் பண்ணிட்டு போதுமான அளவுக்கு இடம் இருக்கு அப்படிங்கிற மாதிரியான விஷயத்தைச் செஞ்சிருக்காங்க. அவங்களும் சில வழிகாட்டுதல் குறிப்புகளை நமக்குக் கொடுத்திருக்காங்க. அந்த வழிகாட்டுதல் குறிப்பை நாமும் வந்து முறையாப் பின்பற்றுறோம். நிகழ்ச்சி வந்து திட்டமிட்டபடி நல்லா போவதற்குரிய வேலைகள் நமக்கு நடந்துகிட்டு இருக்கு. அதிகபட்சமாக ஒரு 26-ஆம் தேதி முடிஞ்சிருச்சு நமக்கு, 27-ஆம் தேதிக்குள்ளாக நமக்கு வந்து அனைத்து மாநாட்டினுடைய பூர்வாங்க பணிகள் அனைத்தும் ஏற்பாட்டுப் பணிகள் எல்லாம் முடிவடைந்திருக்கும்னு நாங்க உறுதியா நம்புறோம்

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பிரதமர் போறப்ப அந்த குடும்பத்தை அழைச்சு பேச வாய்ப்பு இருக்கா:

மாநிலத் தலைமையில அதைப்பத்தி நம்ம யோசனை பண்ணிக்கிட்டு இருக்கோம் சார். ஒரு நல்ல பதில் கிடைக்கும் உங்களுக்கு எல்லாம். ஏன்னு கேட்டாச்சுன்னா பிரதம மந்திரியை யார் யார் சந்திப்பாங்க, யார் சந்திக்கிறாங்கன்றத வந்து நாம வந்து இன்னைக்கு வந்து உங்கள்ட்ட சொன்னாலும் கூட முழுமையான ஒரு பட்டியல் வெளிவந்ததுக்கு பின்னாடிதான் யார் யாரெல்லாம் சந்திக்கிறாங்க அப்படிங்கறது முழுமையா வெளிவரணும். வெளிவராத வரைக்கும் நாம எதையுமே உறுதிப்படுத்த முடியாது.